ஒரு காலையில், என்னைக் கண்டு மலர்ந்த உன் கருநீலப் பூக்களைக் கவனித்ததும் என் வாய் தமிழ் பேசத் தொடங்குகிறது.
“சில பூக்கள் கொடியில் மலரும்; சில பூக்கள் செடியில் மலரும்; சில பூக்கள் மரத்தில் மலரும்..” -நான் முடிக்கவில்லை.
“நீங்கள் ஏதோ சொல்லப்போகிறீர்கள்...” என்று நீ சிணுங்குகிறாய்.
“வேறொன்றுமில்லை. சில பூக்கள் என் காதலியின் முகத்தில் மலரும் என்று சொல்ல வந்தேன்”
உடனே நீ நாணிச் சிவக்கிறாய்.
“அடடா.. சில பூக்கள் என் காதலியின் கன்னத்திலும் மலரும்” என்கிறேன்.
58 |
|
|
|