உன் செவியில் மெதுவாகச் சொல்கிறேன்;
நான் இல்லாதபோது சிரிக்காதே. சிரித்தால், உன் புன்னகைகளைக் கவர்ந்து சென்று தூர தேசத்தில் மணிகள் என்று விற்றுவிடச் சிலர் காத்திருக்கிறார்கள்.
நான் இல்லாதபோது கண்ணீர் சிந்தாதே. சிந்தினால், உன் கண்ணீர்த் துளிகளைச் சேகரித்து அந்நிய நாட்டுச் சந்தைகளில் முத்துக்கள் என்று விற்பதற்குச் சிலர் தயாராயிருக்கிறார்கள்.
இனிமேல் சிரிப்பதென்றாலும், அழுவதென்றாலும் நான் இருக்கும்போது சிரி; அழு!
ஓ...நான் இருக்கும்போது நீ அழவேண்டிய அவசியமில்லையே.
62 |
|
|
|