அவரிடம் மதிப்புரை வாங்குவது ஐ.எஸ்.ஐ முத்திரை பெறுவதைப் போன்றது. இந்த குக்கூக் கவிதைகளைப் படித்துவிட்டு ‘ஜப்பானிய உடையுமில்லை, நடையுமில்லை. இது ஹைகூ இல்லை. தமிழ்க்கூ’ என்ற புகழாரம் சூட்டியுள்ளார். கவிக்கோ எடுத்துக்காட்டாத சில கவிதைகளை மதிப்புரையில் சுட்டிக் காட்டி விளக்கியிருக்கிறார். அணிந்துரை, மதிப்புரை தவிர கவிஞர் தமிழ்நாடன் என்னைப் பற்றி என் பன்முகப் பார்வை, பங்களிப்பு பற்றி எழுதிய கட்டுரையைப் பின்னுரையாக இணைத்துள்ளேன். சென்ற ஏப்ரல் ‘தாமரை’யில் வெளிவந்தது அது. அதைப் படித்துவிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் திரு.ஆர்.என்.கே அவர்கள் இருவரையும் பெரிதும் பாராட்டி எனக்கு ஒரு கடிதம் எழுதினார். 75 இல் ‘அகரம்’ தொடங்கப்பெற்ற போது புத்தக ஆக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்குக் கற்பித்தவர் தமிழ்நாடன். எழுத்துத் துறையில் நிறைய சாதனை புரிந்தவர். அம்மா அம்மா, மண்ணின் மாண்பு போன்ற கவிதைத் தொகுதிகள் மூலம் நிலைத்து நிற்பவர். இந்தச் சின்னத் தொகுப்புக்கு உள்ளபடியே ‘கனம்’ சேர்த்த மூவர்க்கும் இளநீர் வார்த்தைகளால் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கவிக்கோ விருதை டாக்டர் கலைஞர் கைகளால் பெறும் பொன்னாளில், ‘மீரா கவிதைகள்’ ‘கோடையும் வசந்தமும்’ தொகுதிகளுடன் இக்குட்டித் தொகுப்பையும் வெளிவர வைத்த கவிக்கோவின் மருமகன் திரு. அயாஷ் பாஷா சகோதரர் சோலை, திரு.சமரசம் போன்ற கவிக்கோ |