பக்கம் எண் :

மீரா.25

5

மார்கழி மாத விடியல்
குளித்து முடித்துக்
குங்குமப் பொட்டிட்டு
மலம் அள்ள வந்தாள்
தோட்டி மகள்.

6

கோழியும் சேவலும்
குப்பையைக் கிளறும்
விடியற் காலையில்
கண்மூடிக் கிடக்கும்
ஊர்நாய் ஒரு மூலையில்,
இரவெல்லாம் குரைத்த அசதியில்.