பக்கம் எண் :

28.குக்கூ

11

குயில் மயில் தென்றல்
கொஞ்சம் எதுகை மோனை
கூடவே கள்ளுப் பானை...
அட, அப்புறம் என்ன
ஆஸ்தான கவியே ஆகலாம்.

12

வாசற்படிக்குப்
பொருத்தம் என்றேன்
வழியில் கிடந்த
கல்லை எடுத்து ;
‘ஐயோ சாமி’
என்றொரு குரல்
வந்தது அடுத்து.