பக்கம் எண் :

30.குக்கூ

15

இரண்டே இரண்டு
இனியவை ; ஒன்று உன்
இருவிழிப் பார்வை
ஈர்க்கும் காந்தம்
இன்னொன்று ; ஏகாந்தம்.

16

தெருவெங்கும்
கார்த்திகைத் தீபம் ;
தேடினேன்
ஒவ்வொன்றின்
ஒளிச்சுடரின் ஊடே
உன் சொரூபம்.