பக்கம் எண் :

32.குக்கூ

19

கும்பிட்டுப் போனான்
குமரன் தீமூட்டி ;
மல்லிசேரி பீடியை
எடுத்துப் பற்ற வைத்தான்
மயானத் தோட்டி
எரியும் அப்பா பிணத்தில்.

20

விழும்போதெல்லாம்
மீசையில் ஒட்டவேண்டும்
இந்தச் செம்மண் ;
ஏனெனில் எம்மண்.