பக்கம் எண் :

62.குக்கூ

79

சர்க்கஸ் முடிந்த
மறுநாள் மாலையில்
தந்திக்கம்பியில்
குருவிகள் வரிசையாய்
இருப்பதைப் பார்த்து,
கோவணச் சிறுவர்கள்
குதூகலத்துடன்
தட்டுவார்கள் கைகள் சேர்த்து

80

பெட்டிக் கடைக்காரன்
சைக்கிளின் பின்னால்
கடத்தப் பட்ட
பனிப் பெண்
கண்ணீர் முத்தைச்
சிந்திக் கொண்டே போகிறாள் ;
எதுவும் செய்யமுடியவில்லை என்னால்.