பக்கம் எண் :

மீரா.63

81

அரசியல் அப்பா
‘தமிழ்’ எனப் பெயர் வைத்து
அழைத்தார் அப்ப. . .
திரையில்
தமிழ் ஸ்ரீ என்று
அறிமுகமாகிறாள் மகள் இப்ப.

82

பழமை புதுமை
இரண்டுக்கும் நாங்கள் பாலம்
எலி வாகனம்
ஹெலிகாப்டர் வாகனம்
இரண்டையும் கொண்டாடும்
எங்கள் காலம் !