பக்கம் எண் :

64.குக்கூ

83

கார்காலக் கருக்கிருட்டில்
செடிகள் கொடிகள்
செழித்த காட்டில்
யார் பேனாவிலிருந்து
வெளிவருகின்றன
இத்தனை மின் எழுத்துகள்.

84

மார்கழி பிறந்தது. . .
காலையில் வாசலில்
நீ போடுவதென்ன கோலமா?
இல்லை இந்த
ஏழை மனத்தை ஏலமா?