பக்கம் எண் :

மீரா.65

85

மழை பெய்கிறது
கையில் ஒரு குடை. . .
கண்ணே வா ;
இருவரும் இணைந்து
சுகம் காணலாம் நனைந்து.

86

என்றோ ஒருநாள்
இந்துமாக் கடலில்
மூழ்கிக் கிடந்ததாம் இமயம் ;
இன்றோ
உன் நினைவின் ஆழத்தில்
மூழ்கிக் கிடக்கும்
கவிதைகளாலே கனத்த என் இதயம்.