பக்கம் எண் :

76.குக்கூ

107

முகமூடி போட்டேன்
குழந்தைக்கு வேடிக்கை காட்ட,
முடியவில்லை அதற்குப்பின்
முகத்தைச் சும்மா நீட்ட.

108

சலசலக்கும் ஆரவாரமாய்
இலைகள் ஆயிரம்
பக்குவமுள்ள பூ
படிக்கும் மௌனப் பாயிரம்.