பக்கம் எண் :

80

அன்னம்   பதிப்பகம்  தொடங்கிய காலம் வாழும் கவிஞர் யாவரும்
அன்னத்தை நாடிச் சென்றனர்.   நல்ல   கவிஞருக்கு  இடம் கொடுத்து
மகிழ்ந்தது  அன்னம். தம்  குருவான  சிற்பி   தனபால்   அவர்களைக்
கலைஞர்களின் சரணாலயம் என்றார் ஓவியர் ஆதிமூலம். அணு அளவும்
மிகையிலா வார்த்தை. அதைப் போலவே,  கவிஞர்  மீரா  கவிஞர்களின்
சரணாலயம்.

மீராவின் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்  கவிதைத் தொகுதி
எழுபதுகளின்  இளைஞர்  பலரின் தூக்கத்தைக்   கெடுத்தது.  மீரா தன்
காதலிக்கு வரைந்த காதலுரையைக் காதலர் தம் காதலியர்க்கு மறுபதிப்புச்
செய்தனர். வெகுசிலர் மீரா கவிதை  அது என்று குறிப்பிடாமலேயே தம்
கவிதையாய்ப்   பாவித்தனர்.  மீராவின்  கவிதை   காதல்    தூதுக்குப்
பயன்பட்டு பல ஜோடிகள் திருமணம் ஆகி   இன்று  குட்டிப்   பேரன்
பேத்திகளோடு.   இது   போன்ற   நடப்பு  உலகில்    வேறெங்காவது
நடந்திருக்கலாம். நம் காலத் தமிழ் இலக்கிய உலகில் புதிது.

‘தம் கவிதைத் தொகுதி மூலம் இளைஞர்களின்  காதற்  கனவுகளைப்
பரிசுத்தப்படுத்த வரம் நல்கிய கவிஞர் மீரா’  என்பார் முனைவர் பாலா.
அது உண்மையே.   தத்துப்பித்தென்று   உளறிக்  கொட்டும்   கன்னிக்
காதலர்க்கு மீராவின்   கனவுகள் + கற்பனைகள் ஒரு நன்னூல் ஆயிற்று.

மீராவின்  கனவுகள்  தன்னிரக்கக்   காதலுரைகள். ஆனால் அதில்
அவர்   கையாண்ட   ஒவ்வொரு  உவமையும்   உருவகமும்  புதியன.
முற்போக்குக்  கவிஞர்கள்     மீது    அப்போது   ‘ஒரே     மாதிரி
எழுதுகிறார்கள், மொழி பெயர்ப்புப் போல்  தோன்றுகிறது, அயல்மொழி
உரு, உத்தி, படிமங்கள் என்ற குற்றச்சாட்டுகள். ஒரே  போடு  போட்டு
இந்த இழிவுகளை விரட்டி அடித்தது மீராவின் கவிதை.

அவரது  கனவுகளில்,  காவிரியைப்   போலவே   வால்கா நதியும்
கரைபுரண்டோடியது. அவரது கற்பனைகளில்