பக்கம் எண் :

              கோழியின்பதில்         
 

பையன் :



              
பெட்டைக் கோழி, பெட்டைக் கோழி,
                 
தட்டு நெல்லைத் தருகிறேன்.
               இட்ட முட்டை எத்த னையோ?
                
 இன்றே எண்ணித் தந்திடு.
 

கோழி :


            
 எட்டு நாளாய்த் தினமுமே
                 இட்டு வைத்தேன் முட்டைகள்.
             
இட்ட முட்டை எட்டையும்
                 எடுத்துக் கொண்டான் ஒருவனே.

            
அவயங் காக்க நானுமே
                ஆசை கொண்டேன்; ஆயினும்
            
அபயம் தந்த மனிதனே
                அனைத்தும் தின்று தீர்த்தனன் !

            
குஞ்சு பொரித்துப் பார்க்கவே
                கொண்டேன் ஆசை ; ஆயினும்
           
 மிஞ்ச வில்லை முட்டைகள் ;
                முழுதும் அவனே தின்றனன்.

            
எட்டு முட்டை தின்றவன்
                என்னை என்ன செய்வனோ?
           
 விட்டு வைக்க வேண்டுமே.
                மிஞ்சு வேனோ நானுமே !

 

 
132