சுதந்திர நாளில் நினைத்ததைச் செய்வதே
சுதந்திரம் என்று பொன்னன் நினைத்தான்.
விதம்வித
மான தொல்லைகள் வரவே
மெத்தவும் மனத்தில் வேதனை அடைந்தான்.
சோம்பிக் கிடைப்பது சுதந்திரம் இல்லை.
தொல்லைகள் தருவதும் சுதந்திரம் இல்லை.
வீம்புகள்
செய்வதும் சுதந்திரம் இல்லை.
வேறெது உண்மைச் சுதந்திரம் ஆகும் ?
பிறரது
உரிமையை மதிப்பது சுதந்திரம்.
பேச்சிலும் செயலிலும் தூய்மையே சுதந்திரம்.
உரிமையும்,
கடமையும் ஒன்றாய்ச் சேர்வதே
உண்மையில் சுதந்திரம், சுதந்திரமாகும் ! |