சங்கு சக்கரச் சாமி
சங்கு சக்கரச் சாமியாம்; சாய்ந்து படுத்துக் கிடக்குமாம்; எங்கே, எங்கே, தெரியுமா? எங்கள் ஊருக் கோயிலில். நீட்டிப் படுத்துக் கிடக்குமாம்; நீல வண்ணச் சாமியைப் பாட்டுப் பாடி எழுப்பலாம். கூட்ட மாக வாருங்கள்.