கை
அன்னம் எனக்கே ஊட்டிய கை. அன்பாய்த் தொட்டில் ஆட்டிய கை. வண்ணப் பறவை காட்டிய கை. மலர்கள் தலையில் சூட்டிய கை. கண்கவர் சட்டை மாட்டிய கை. கண்ணில் மையைத் தீட்டிய கை. கட்டி அணைத்துப் போற்றிய கை. கடவுள் போன்ற அன்னையின் கை !