முத்தங் கொடுப்பவளே
- கொடி
முந்தரி பூத்ததுபார்!
அத்தி மரக்கிளையின் - தளிர்
ஆடும் அழகினைப்பார்!
குத்தும் மலையருகே - புறா
கூவிக் குலவுதுபார்!
தொத்தும் பசுங்கிளியை - மயில்
தூது விடுவதைப்பார்!
ஒத்த மனத்தினளே - குளிர்
ஓடை ழுழவொலிபோல்,
சத்தங் கொடுக்குதடி - மலை
சந்தனம் சிந்துதடி!
முத்துச் சிரிப்பழகி - மலர்
மூச்சு மணக்குதடி.
கத்தரிக் கோடையிலே - இளங்
கத்தரி காய்க்குதடி!
சங்கத் தமிழ்மதுரை - நகர்
தாண்டித் தவழ்ந்துவரும்
மங்கலத் தென்றலிலே - கரு
வண்டு மயங்குதடி!