பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை24

வெயிலாடியுன் மேனிக றுத்ததுவோ?
      விளையாடியுன் பார்வைப ழுத்ததுவோ?
மயில்தான்கும ரேசனின் வாகனமோ?
       மணமேடையு னக்கெது? மாமரமோ!

என்னைத்தெரி யாதவ ரோபலபேர்;
       என்னைக்குறை கூறிடு வார்சிலபேர்;
உன்னைத்தெரி யாதவ ரேயிலரே;
       உயிரோவிய மே! முகி லின்பகையே!


  நிலா
(`தெள்ளுதமி ழுக்குதவு சீலன்' என்னும்
     காவடிச் சிந்து மெட்டு,)
ஆசைகொண்டு விண்வெளியின் மீது-மதி
      ஆடையின்றி யேவுலவும் மாது -முகில்
ஓசைகொண்ட மண்டலத்தில்
      ஊர்ந்துலவி வாழ்ந்துவரும்
            ஊமை-வெள்ளி
            ஆமை!

தேசமெல்லாம் சுற்றிவரும் தெப்பம் -குளிர்
      திங்களொரு சங்குமணி அப்பம் -சிலர்
பூசலுக்கும் ஏசலுக்கும்
      பொங்கியெழுங் காதலுக்கும்
            பொறுப்பு-நிலாச்
             சிரிப்பு!

வல்லியிடை மங்கையரை வாட்டும்-ஒளி
      வாங்கிவைத்து நம்மிடத்தில் காட்டும்! -ஆமூர்
மல்லனென்பான் தோளைநிகர்
      மாமலையின் உச்சியைப்போய்
            வாழ்த்தும்-தலை
             தாழ்த்தும்!