நல்லவர்தம்
நட்பெனவே வளரும்-சில
நாளிலதன் ஈரவுடல் தளரும் -இன்பச்
சொல்லமுதப் பாவலரைத்
தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும்
சோதி
-வான்
ஊதி!
மொட்டுமுல்லைக் கட்டவிழ்ந்தாற் போலே-வெள்ளி
முத்திரைமி தக்குதுபார் மேலே!-மதி
வெட்டவெளி மீதினிலே
வெற்றிமன்னன் வெண்குடைபோல்
விரியும்-நகை
புரியும்!
வட்டமிட்ட வெண்ணிலவின் மீது-காயம்
வந்தமையைக் காரணந்தான் யாது?-வண்ணக்
கட்டழகி அஞ்சனத்தை
விட்டெறிந்த தால்விளைந்த
கறையோ?
-சொந்தக்
குறையோ
|
|
பூம்புகார்
|
கல்லினால் எல்லை
காட்டிக்
காதலால் இதயங் காட்டி
வில்லினால் வீரங் காட்டி
வென்றபின் ஈரங் காட்டி
சொல்லினால் நீதி காட்டிச்
சோழர்கள் ஆண்டு வந்த
தொல்புகார் நகரம்,
கீர்த்தி தூங்காத நகர மாகும்!
|
|
|
|