|
வரிப்புலி
பாய்ச்சல், இந்த
வையத்தில் எதற்கு மில்லை.
விரைந்துசெல் குதிரை ஓட்டம்
வேறொரு விலங்குக் கில்லை;
நெருங்கியே நின்று, காதல்
நிகழ்ச்சியில் ஈடு பட்டுப்
பொருந்தலில் உன்னை வெல்வார்
புவிதனில் யாரு மில்லை.
புற்றினை விட்டெ ழுந்தே
பாம்புகள் போகக் கண்டும்
சிற்றெறும் பெல்லாம் எங்கும்
திரிந்திடக் கண்டும் நீயோ
தற்பொழு திந்த நாட்டின்
தலைவருட் சிலரைப் போலே
அற்புதச் உலகைச் சுற்றும்
ஆசையற் றிருக்கின் றாயே!
|