|
வரிப்புலியின்
வாய்பிளந்த வீர வேந்தன்,
மாலையிட்ட மங்கையிடம் பேசிக் கொண்டே.
நரைத்தநுரை முட்டையிட்டுக் கொண்டி ருந்த
நதிநீரின் நீட்டத்தில் நீந்த லானான்.
திரைத்திரளால் நெடுங்கரையைக் கரைப்ப தற்குத்
திட்டமிட்ட வெள்ளத்தில், துள்ளித்
துள்ளிச்
சிரித்தபடி, சிலிர்த்தபடி, கண்ணுங் கண்ணும்
சிவந்தபடி, அவளும்நீ ராட லானாள்.
தலைநிமிர்ந்த புகழ்பெற்ற சோழ நாட்டின்
தாய்ப்பாலாம் காவிரியின் ஈர நீரில்
மலருதிர்ந்து போர்வையைக்போல் மிதக்க,
மேற்கு மலைச்சாரல் சந்தனம், தக் கோலம்
யாவும்
அலையுயர்ந்த வெள்ளத்தில் மிதக்க, செங்கால்
அன்னம்போல் ஓடங்கள் மிதக்க, ஒர்பால்
சிலர்மிதந்து நீராட, நதியில் ஈரச்
சிலையாகிக் கொண்டிருந்தாள் ஆதி மந்தி!
சூரியனை நோக்குகின்ற நெருஞ்சிப் பூப்போல்
தோகையவள் மாவீரன் முகத்தை நோக்கி,
`நீரைவிட நுட்பமெது? சொல்வீர்` என்றாள்,
`நெய்` என்றான்; `நெய்யைவிட புகையே
`என்றாள்,
"தாரணியில் அனிச்சமலர் உனக்கு நுட்பம்
தமிழ்க்குயிலே உன்னுடலே எனக்கு நுட்பம்,
பேரழகே எனைமயக்கும் மதுவாம்!" என்றான்,
பெரியதிரு வாய்மொழியாள் சிறுசொல் செய்தாள்.
`தண்ணீரின் ஏப்பந்தான் அலைகள்` என்றான்.
`தமிழ்க்கலைகள் வாழ்நாளை வளர்க்கும்`
என்றாள்.
`விண்மீது விளங்குகின்ற நிலவின் மீது
வீடுகட்டும் காலமொன்று வந்தே தீரும்
|