பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை34

இணை மோனை

வீர வெறி யோடெதிர்த்து, நின்று வென்ற
      விளங்குதினை வேந்தேகேள்; இவர்யார் என்றால்
ஈர மலர் முல்லைக்கு தங்கத் தேரும்
      இரவலர்க்கு வயல் வரிசை ஊரும் ஈந்த
மாரிமழை பாரிவள்ளல் மகளிர்; அந்த
      மன்னவனின் தோழன்யான்; எனவே, இந்தப்
பேரவையின் திரைமறைவில் அமர்ந்தி ருக்கும்
      பேரழகு மங்கையரென் மகளி ராவர்.

நிறத்தாலே பிறப்பாலே சிறந்தோர் என்று
      நினைப்பவரெல் லாங்கடையர் மடையர்; மேனி
நிறத்தாலே அந்தணர்கள் சிறந்தா ரேனும்
      நினைப்பாலே உயராதார் மேலோர் ஆகார்.
அறத்தாலே சிறந்தோன்யான்; வேள்வி செய்யா
       அந்தணன்யான்; ஆராய்ந்து செய்யுள் செய்யும்
திறத்தாலே சிறந்தோன்யான், குறிஞ்சி பாடும்
      திறன்மிகுந்த புலவன்யான், கபிலன் என்பேர்.

அருந்துதற்கே உதவாத நீரைப் பெற்றும்
      அழியாத மரபுடைய அலைகள் பெற்றும்
திருந்துதற்கோ, வாயடங்கித் தூங்கு தற்கோ,
       தெரியாத கரியகடல் நீரை நாடிப்
பொருந்துவதற்கு விரைந்தோடும் நதியும், வண்ணப்
      பூவுதிரும் சோலைகளும் சூழ்ந்த நாட்டை.
வருந்துவதற்கோ, இருள் சூழ்ந்த ஆட்சி யென்று
       வரைவதற்கோ வழியின்றி ஆளும் வேந்தே!

மலைமுனிவன் பேரருளைப் பெற்ற வேளிர்
      மரபினிலே வந்தவன்நீ; நாற்பத் தெட்டுத்