|
தலைமுறையைத்
தாண்டி வந்த தலைவன்; போரில்
தனிவீரங் காட்டியவன்; குருதி யுண்ட
இலையுடைய வேல்நின்வேல் மையல் யானை
ஏறுகின்ற இருங்கோவேள்; செவ்வேள் நீயோ
புலிகடிமால்! பொய்யாத புலவர் கையில்
பொன்பரப்பும் மதுமாலை மன்னர் மன்னன்.
விழா நகரம்; புலிப்பகைவர் தாக்கி னுங்,க
விழாநகரம்; புண்தோளா டவர்வாள் வீரம்
விழாநகரம்; நதிநகரும் நகரம்; வெற்றி
விழாநகரம்; மாற்றார்க்கு மண்டி யிட்டுத்
தொழாநகரம்; தமிழ்நீதி நகரம்; துன்பந்
தொடாநகரம்; பசியாலும் பிணியி னாலும்
அழாநகரம்; அறம்பொருளோ டின்பம் மூன்றும்
அறாநகரம், அரசேநின் நகர மாகும்!
வாய்க்காலின் தண்ணீரைத் தொட்டுத் தூங்கும்
வயல்தனிலே ஏருழவின் செய்தி யுண்டு.
தாய்ப்பாலில் குடும்பத்தின் கதையும் நாட்டின்
சரித்திரமும் சந்தித்துக் கொண்டி ருக்கும்.
போய்ப்பாயும் வரிப்புலியின் நகத்தில் வீரப்
புரட்சியுண்டு. தொகைதொகையாய்ப் பகைவர்
தேரைச்
சாய்த்தோனே! இவ்வுலகில் இன்றும் என்றும்
சாயாத நின்புகழில் அனைத்தும் உண்டு.
அடிவயிற்றில் செம்பொன்னைச் சுமந்து கொண்டும்
அருவிதனைக் தலைமையில் தொங்க விட்டும்
முடிவெடுத்த உயரத்தை முடியாற் காட்டும்
முதிர்ந்தமலை உடையவனே! வெற்றி யோடு
வடபுலத்தில் வாழ்பவனே! செம்பு சேர்ந்த
மதில்சூழ்ந்த மன்னவனே! பகைவர் நாட்டைக்
|