பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை37

மூலம் : புறநானூறு (201)

இவரியார் என்குவை யாயி னிவரே
ஊருட னிரவலர்க் கருளித் தேருடன்
முல்லைக் கீத்த செல்லா நல்லிசைப்
படுமணி யானைப் பறம்பிற் கோமான்
நெடுமாப் பாரி மகளிர் யானே
தந்தை தோழ னிவரென் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே

நீயே வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறற்போ ரண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங் கோவே
ஆண்கட னுடைமையிற் பாண்கட னாற்றிய
ஒளியற் கண்ணி புலிகடி மாஅல்
யான்றர விவரைக் கொண்மதி வான்கவித்து
இருங்கட லுடுத்தவிவ் வையகத் தருந்திறற்
பொன்படு மால்வரைக் கிழவ வென்வேல்
உடலுந ருட்குந் தானைக்
கெடலருங் குரைய நாடுகிழ வோயே;

-கபிலர் பாடியது,
ஆற்றப் படை
நேரசையில் நின்றடங்கும் பெயரே கொண்டோன்
       நிறங்கொண்ட தாமரையின் நிறமே கொண்டோன்
ஊரினையும் உலகினையும் தாண்டி, விண்ணின்
      உச்சியைப் போய்த் தீண்டுகின்ற கீர்த்தி கொண்டோன்