பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை39

முடியேந்தும் செம்மணிபோற் சிறந்த வள்ளல்
      முன்நின்றேன் `யாரென்றான்?' 'விறலி', என்றேன்.
"நடையேந்தி வந்தவளே! நாளை இங்கே
      நடக்கட்டும் நின்நடனம்? என்றான் ஆய்வேள்.
கொடியேந்தும் நகரினிலே நீல வானம்
            குளிரேந்தும் இரவினிலே, மின்னும் தங்கப்
படியேந்தும் மண்டபத்தில் ஆட லானேன்;
       பார்வையினால் கோணங்கள் போட லானேன்.

மண்டபத்தில் மயிலானேன் ஆட்டத் தாலே!
      மாமன்னன் தலையசைத்தான் மகிழ்ச்சி யாலே!
பண்பழுத்த புலவரெலாம் மயங்க லானார்
       பார்வையொளி அவர்மீது படிந்த தாலே!
அண்டையில்வீற் றிருந்தபலர்`அடடா` என்றார்.
       அச்சமற்ற வீரரெல்லாம் மெச்சி நின்றார்.
வண்டனைந்த குழல்மாதர் வியந்து நோக்கி
       வையகத்தில் வழக்கிழந்த மொழிபோ லானார்.

படித்துள்ளங் குளிர்பவனும், படியார் தம்மைப்
      படிப்பித்தே மகிழ்பவனும், பழிச்சொல் கேட்டுத்
துடித்துள்ளங் கொதிப்பவனும், எளியோர் கண்ணீர்
       துடித்துள்ளும் நெகிழ்பவனும், வருவோர்க் கெல்லாம்
கொடுத்துக்கை சிவப்பவனும் `தமிழென் ஆவி;
       குளித்துக்கொள்` என்பவனும் ஆன ஆய்வேள்;
'எடுத்துக்கொள் எடுத்துக்கொள், மின்னும் பொன்னை
       ஏற்றுக்கொள், ஏந்திக்கொள்' என்றே ஈந்தான்.

நன்றாகச் சூல்கொண்ட முகிலின் கூட்டம்
       நாற்புறமும் வெண்ணிலவைச் சூழ்ந்தாற் போலே,
குற்றாத கருமைநிறக் குழலின் மீது குளிர்முல்லை
       சூடிக்கொண் டிருக்கும் பெண்ணே!