|
தென்பாண்டித் முத்தேபோற் சிறந்தோன் நாட்டில்,
தெள்ளியநீ ரோடையெல்லாம் பாடல் பாடும்;
மன்றோரம் நின்றுள்ள பலாம ரங்கள்
மத்தளத்தை ஒத்தபல கனிகள் காட்டும்;
மயில்தூங்க வேங்கைமரம் இடங்கொ டுக்கும்;
மதயானை தன்காலால் தினையி டிக்கும்;
வயல்நீரை வரப்பெல்லாம் அளக்கும்; நாட்டின்
வளத்தையெல்லாம் குறிஞ்சிநிலம் விளக்கும்;
வண்ணக்
குயில்பாதி, குரல்பாதி மகழ்ச்சியூட்டும்,
குறுமுயல்கள் நெல்லிக்காய் விழிகள் காட்டும்;
செயல்வீரம் புரிவதற்கு வேங்கை ஓடும்;
தேனடையை மந்தியுண்டு மயங்கி யாடும்.
என்றென்றும் ஈவானைத் தேர்வே ளாயை,
ஏந்திழையை! நீகாண வேண்டின், தெற்கே
குன்றின்கண் விளையாடிக் கொல்லை முல்லைக்
கொத்துக்கு முத்தமிட்டுப் 'பூவின் ஆவி'
என்கின்ற நறுமணத்தை எங்கும் வாரி
இறைக்கின்ற தென்றலினால் உன்றன் கூந்தல்,
மின்கொண்ட முகில்கண்டு மயிலின் தோகை
விரிவதுபோல் விரிந்தசையச் செல்க" என்றாள்.
மூலம்: புறநானுறு
(133)
மெல்லிய விறலிநீ நல்லிசை செவியிற்
கேட்பி னல்லது காண்பறி யலையே
காண்டல் வேண்டினை யாயின் மாண்டநின்
விரைவளர் கூந்தல் வரைவளி யுளரக்
கலவ மஞ்ஞையிற் காண்வர வியலி
மாரி யன்ன வண்மைத்
தேர்வே ளாயைக் காணிய சென்மே!
|
|
-உறையுர் ஏணிச்சேரி முடமோசியார்,
|
|
|
|