|
சமணன்
சாதித்தான்
|
|
நாவீற்றி ருந்ததமிழ்ப் புலவ ரோடு
நற்கவிஞன் திருத்தக்க தேவன் என்பான்
பூவீற்றி ருப்பதுபோல் வீற்றி ருந்தான்.
பொருந்திலிளங் கீரெனன்பான் அவனை நோக்கி;
"மாவீற்றி ருக்கின்ற தோப்பில், வண்ண
வரிக்குயில்கள் வீற்றிருக்கும், அறங்கொல்
லாத
கோவீற்றி ருக்கின்ற நாட்டில் செங்கோல்
குனியா" தென் றான்; தேவன் 'ஆம்ஆம்'
என்றான்.
'ஆய்ந்துணர்வோர் நெஞ்சமெல்லாம் கல்வி யாலே
அன்றாடம் சிவக்கு' மென்றான் அவியன்
என்பான்,
'மாந்தரெல்லாம் உணவினிலே இன்பம் காண்பார்;
மாகவிஞன் இன்பத்தில் உணவு காண்பான்;
தீந்தமிழ்போல் பிறமொழிகள் இனிப்ப தில்லை!
திருத்தங்கள் இல்லாத நாடே இல்லை,
ஏந்துபுகழ்ப் பாவலரே!` என்றான் தேவன்,
இடையாற்று மங்கலத்தான் 'ஆம்ஆம்' என்றான்;
'பதிபக்திப் பாட்டெழுதல் எளிது; காதற்
பாட்டெழுதிக் காட்டுவதே கடினம்' என்றே
அதவத்தூர் புதுமதியன் கூற, ஆங்கே
அமர்திருந்த திருத்தக்கண் அவனை நோக்கி
'மதிமிக்கோன் சாதிப்பான் எதையும்; அன்னோன்
மாற்றாரின் புத்தகத்தாற் பிழைக்க மாட்டான்;
எதிர்நிற்பான் வென்றாரை வெல்வான்' என்றான்;
'எழுதுவிரோ நீர்?' என்றான்; "இயலும்" என்றான்.
முதலடியைத் தேனாக்கி, அடுத்த டுத்து
முளைக்கின்ற தொடரடியை அமுத மாக்கி
|
|
|
|