|
மாடத்திலும்
கூடத்திலும்
|
கூடத்தில் நின்றி
ருந்தான்
கோவலன்; நிமிர்ந்து யர்ந்த
மாடத்தில் நின்றி ருந்தாள்
மாதவி! குன்றத் தென்றல்
ஆடிற்றாம்! அவள்பட் டாடை
அசைந்ததாம்! அவிழ வில்லை.
பாடிற்றாம் வீணை வண்டு!
பாடினாள் மையல் கொண்டு!
விண்கொண்ட சுடரோன் தூங்க,
வெண்ணிலா விழிக்க, விண்மீண்
எண்கொண்டு குளிர்ந்த வெள்ளி
இரவிலே இடையி லாதாள்
கண்கள் போய் அவனைத் தீண்ட,
காதல் நோய் கொண்டோன் வேண்டா,
எண்ணங்கள் ஏணி யாக
இருவரும் ஒருவ ரானார்!
தோணிக்கோர் துடுப்பே போன்றான்
தொகைமலர் மாதை நோக்கி,
"ஆணுக்குப் பெண்ணே போர்வை;
அணங்குக்கும் ஆணே போர்வை;
மாணிக்க மணியே! மாடே!
மலர்ந்தபூக் காடே! ?என்றான்.
நாணிக்கண் புதைத்த நங்கை
நானென்ன மாடோ?" என்றாள்.
"மாடென்று சொன்னேன், மின்னும்
மங்கையே பொங்கி விட்டாய்.
மாடென்னும் தமிழ்ச்சொல் லுக்கு
மற்றுமோர் பொருளு முண்டு; |
|
|
|