பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை48

பால்மீது சேர்கின்ற பிரைமோர் போன்று
       பரவுகின்ற காமத்தால் கருகி வந்தோன்,
தோல்மீதும் தொடைமீதும் சித்தூர் மன்னன்
      தொட்டணைத்த கட்டழகி முகத்தின் மீதும்
கால்மீதும் கண்மீதும் மூடும் மேடைக்
      கனிமீதும் ஆசைவைத்தான்; படையெடுத்தான்.

'கூற்றுவினை ஆடவர்கள்' என்னும் வீரர்
       கொதித்தெதிர்க்க சித்தூரின் கோட்டை வேந்தன்
ஆற்றருகில் சென்றுநின்றே அவனைத் தாக்க,
       அலாவுத்தீன் பீம்சிங்கை நோக்கி; 'அந்த
மாற்றறியாப் பசும்பொன்னை, நின்னைக் கொஞ்சும்
      மதுமதியை, ஒருமுறைநான் பார்த்தால் போதும்;
தோற்றவன்போல் திரும்பிப்போய் விடுவேன்' என்றான்;
       தூங்காத வாள்வேந்தன் ஒப்புக் கொண்டான்.

இலைகளுக்குப் பின்புறத்தில் காய்கள் போன்றும்
      இருள்முகிலின் பின்புறத்தில் நிலவு போன்றும்
மலைகளுக்குப் பின்புறத்தில் சிற்றூர் போன்றும்
      மறைவாக அரண்மனையில் வாழ்ந்து வந்த
கலைமடந்தை, அக்கொடியோன் காண வேண்டிக்
       கண்ணாடி முன்வந்து நடுங்கி நின்று
தலையெனுந்தா மரைக்காட்டி, அல்லி காட்டித்
      தங்கத்தேர் வடிவழக்கைக் காட்ட லானாள்.

கண்ணேபோற் சிறந்தவளைச் சித்தூர் முத்தைக்
      கண்ணாடி தனிற்கண்டு காமங் கொண்டு
புண்ணானான்; புதுக்காம ராச னானான்,
       பூவையிவள், தேவையிவள், இப்பூ வுக்கோர்
வண்டாகி விடவேண்டும்; இன்றேல் என்றன்
       வாழ்நாளை விடவேண்டும்; இவள்கைப் பட்டால்