பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை50

காதல் மேகம்
மூவருலா நூல்படித்துக் கொண் டிருந்தாள்
       மூத்தநிலா வெளிச்சத்தில் மோக னாங்கி,
ஆவலொடு காணவந்தோன் காள மேகம்,
       "ஆரணங்கே" என்றழைத்தான்; பேசவில்லை
"காவியமே! கடல்நீரை உந்தித் தள்ளும்
       காவிரியே! கதவுதனைக் திறவாய்" என்றான்.
பாவையவள் தெருக்கதவைத் திறந்தா ளில்லை.
      பழம்பழுத்த வாய்திறந்தும் பேசவில்லை!

மங்கலப்பொன் போன்றவளே ஏனோ இந்த
       மனமாற்றம்?" எனக்கேட்க நங்கை நோக்கி
"இங்கிருப்போர் எனையிகழா திருக்க வேண்டின்
       எம்மதத்தில் நீர்சேர வேண்டும்; இன்றேல்
தங்களையான் இனித்தீண்டேன். வேண்டேன்" என்றாள்.
       தமிழ்க்கவிஞன் திருநீற்றுச் சைவ னானான்.
செங்கமலம் தெருக்கதவைத் திறக்க, நெற்றிச்
       சீர்திருத்தம் செய்துகொண்டோன் உள்ளேவந்தான்!

"இருநெஞ்சங் கொண்டவளின் மகளே! தெங்கின்
       இளநீரே! இனிநமக்குள் ஆண்பால் பெண்பால்
பிரிவின்றி வேறெந்தப் பிரிவு மில்லை.
       பேதமில்லை இருசமய விளக்க மில்லை;
திருமங்கை ஆழ்வாரின் நெற்றிக் கோடு
       தேவையில்லை, நீதேவை என்ப தாலே!
சரி என்னைப் பார்பெண்ணே! எனக்குன் னோடு
       சம்பந்தம் உண்டதனால் நான்சம் பந்தன்!

"மதமென்ன மதம்! பெரிய மதம்! மா துன்சம்
       மதமிருந்தால் எனக்கதுவே போதும்; புத்த