பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை51

மதமென்ன, புத்தமுத மோ? கௌ மார
      மதம், சமணம் இருளறுக்கு மோ? எல் லாம்வாய்
மதமன்றி வேறென்ன? உயிரெ ழுத்து
      வந்தால்குற் றியலுகரம் மெய்விட் டோடும்,
மதமெல்லாம் பகுத்தறிவு வளர்ந்தால் ஓடும்!
       மதிபொங்கப் பொங்கவெளி மதங்கள் மங்கும்!

"இரட்டையர்நாம்; இணையெதுகை இனிநாம்; நீயோர்
       ஈரவயல்; நானோர்ஏர் உழவன்; கட்டில்
எரித்திரத்தின் சாசனமே! அன்-அம் என்னும்
       சாரியையே! தொடுபதமென் றழைக்கும் சோறே!
பருப்பளவு குற்றத்தை இந்த நாடு
       பனையவளாய்ப் பேசுமென்ப தறிவேன், இந்தக்
குருட்டுலகம். குறும்புலகம் இனிமேல் என்னைக்
      குறைகூறும்; கூறட்டும் கவலை யில்லை,

"எப்போதும் இனிப்பவளே! ' ழ' கரம் என்னும்
       எழுத்தேபோற் சிறந்தவளே! பொதுச்சீர் மாதே!
உப்பே! பெண்ஓவியமே! தலைமை தாங்கும்
       உவமையனி போன்றவளே! எனக்கு வாய்த்த
முப்பாலே! கரிக்காதே கடலே! செம்பொன்
       முத்திரையே! முழுமதியே! என்றன் வாய்க்குத்
தப்பாத மூவசைச்சீர் கனியே ! சேற்றுத்
       தாமரையே! கூந்தல்கொண்ட பிறையே! கேளாய்,"

"தென் கடலில் முத்திருக்கும்; செல்வ மேநீ
       திறக்கும்வாய் வாசலிலே முத்தி ருக்கும்;
தென்மலையில் மணக்கும்சந் தனமி ருக்கும்;
       சிற்றின்பத் தனமுன்ற னிடமி ருக்கும்!
தென்திசையில் குளித்தென்றல் படுத்தி ருக்கும்;
       செவ்வல்லி நின்உதட்டில் படுத்தி ருக்கும்!