|
நல்ல
தீர்ப்பு
|
பாதிநிலா
வடிவமுள்ள படிகள்; அந்தப்
படிகளின்மேல் காவலர்கள்; கற்று வல்ல
மூதறிஞர் ஓர்பக்கம்; மக்க ளோடு
முழுத்திருடன் ஓர்பக்கம்! அவனை நோக்கிக்
"காதகனா நீ?" என்று கேட்டான். சீதக்
காதியெனும் காயற்பட் டினத்து வள்ளல்!
"காதுடையோன், அகமுடையோன் எனவே, யானோர்
காதகனே? என்றுரைத்தான் அந்தக் கள்வன்.
"திருடியவன், திருடியவன் என்கின் றீர்கள்;
திருடன்தான், திருடன்தான் மறுத்தே னில்லை!
திருடுவது குற்றமெனில், செல்வ மெல்லாம்
சிலரிடம்போய்ச் சேருவதும் குற்ற மாகும்!
அரசியலின் அதிபதிகள், ஏற்றத் தாழ்வை
அகற்றாமல், எல்லார்க்கும் எல்லாம் ஈந்தே
சரிசமமாய் நடத்தாமல் ஏய்க்கு மட்டும்,
தரணியிலே குற்றங்கள் நிகழ்ந்தே தீரும்!
"தென்கோடித் திருடன்யான்; ஆல யத்தில்
திருடியுள்ளேன் திருமங்கை ஆழ்வார் போலே!
அன்றாடம் கன்னியரைக் கற்ப ழித்தே
ஆனந்தம் கண்டோன்யான் கோபாட்
போல! முன்கோபங் கொண்டவன்யான் பாண்டி நாட்டு
முடிவேந்த னாம்தந்து மாறன் போல!
பொன்னாசை எனக்குண்டு, வணிகர் போலப்
புகழ்வெறியும் எனக்குண்டு சேரர் போல!
"வில்லூரில் விசலூரில் தித்தன் என்பான்
வீற்றிருந்த உறையூரில் வேம்பத் தூரில்
|
|
|
|