|
மல்லூரில்
பரஞ்சோதி முனிவர் வாழ்ந்த
மறைக்காட்டில் குளிர்தூங்கு குற்றா லத்தில்
பல்லூரில் திருடியவன்; இன்றோ காயற்
பட்டினத்தில் அகப்பட்டேன். வெட்டுப்
பட்டேன்.
நல்லோரே ! நான்நொண்டி யாகி விட்டேன்;
நாற்சீரில் கடைச்சீர் குறைந்தாற் போல!
பட்டினத்தார் துறவறநூல் பாடி வைத்த
பாட்டினத்தார்; மங்கையரோ, மென்மை யான
பட்டினத்தார்; தாலாட்டுப் பாடல் பாடும்
பாட்டினத்தார். பூமானே; நீயோ காயற்
பட்டினத்தார்; காப்பியங்கள் இயற்று கின்ற
பாட்டினத்தார்க் குதவிசெய்யும் பட்டி னத்தார்!
பட்டினத்தார் கொள்கையினைத் தாக்கித் தாக்கிப்
பாட்டெழுதும் நன்நாகைப் பட்டி னத்தான்.
திருடுகின்ற இருள்மனிதன் எனினும். யானோர்
தேன்கவிஞன். என்நெஞ்சில் எழுந்த பாடல்,
அருமருந்து போல்நோயை நீக்கும் பாடல்;
அப்பாடல், குப்பைக்குப் போகாப் பாடல்,
பெருமையில்லாப் பாட்டெழுத மாட்டேன் என்னைப்
பின்பற்றி எழுதுதற்கோர் கூட்டமுண்டு!
கருவடைந்த பெண்பெறுவாள் குழந்தை; என்றன்
கவிதைகளும் என்புகழுக்குத் தாயாய் நிற்கும்!
"சுனையொன்றில் பூத்தபல மலர்கள் போன்று
சூழ்ந்துள்ள புலவர்களே! நீங்கள் எல்லாம்,
பனியென்பீர். 'நிலாவழிக்கும் வியர்வை' என்பேன்;
பாடையென்பீர், "கால்கழிந்த கட்டில்" என்பேன்;
"கனியென்பீர் 'விதைக்குடும்பம்' என்பேன்; நீலக்
கடலென்பீர், 'மண்மகளிர் ஆடை' என்பேன்.
|