பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை56

குமணன்
வான்மீது செங்கதிரோன் நகர்ந்த நேரம்
       மலைமூங்கில் தலையசைத்த பாதை யோரம்
பேன்பார்த்த கருங்குரங்கைத் தூக்கி வைத்துப்
      பெருமையோடு தலையசைத்த மரங்கள் ஓர்பால்;
தேன்வாழை செவ்வாழை, பாயும் வேங்கை
      சிற்றடிபோல் அவ்வாழை மரத்தின் காய்கள்;
மான்கூட்டம், நீரோடை ஓட்டம் ஓர்பால்,
      மலைப்பன்றிப் போர்க்காட்சி படலம் ஓர்பால்;
பம்பம்பம் பம்பம்பம் பம்பம் என்றே
      பம்பையெல்லாம் ஒலிசெய்ய; மலைக ளோடு
சம்பந்தங் கொண்டகுளிர் அருவி யெல்லாம்
      தந்தத்தித் தோமென்று ஓசை செய்யக்
கொம்புத் தேன் வடித்துக்கொண் டிருந்தாள்ஓர்பெண்;
      குமணவள்ளல் வெறுந்தரையிற் படுத்திருந்தான்;
சம்பத்தைக் பெறவேண்டிச் சாத்தான் என்பான்
      தனியேயவ் வழியாக நடந்து சென்றான்.

"நடையதுகற் றிடுமுன்பே கொடைகற் றோனை
       நற்புலவன் பெருஞ்சாத்தான் காட்டிற் கண்டான்.
கொடியசைக் குரலோங்க நாட்டை யாண்ட
       குமணவள்ளல் தன்தம்பி சூழ்ச்சி யாலே
முடியிழந்து முன்னேற்ற மிழந்து, வேங்கை
      மூச்சுவிடுங் கானகத்தில் வாடக் கண்டு,
தடையுடைய வாழ்வுடையோன் கலங்கி நின்றான்.
       "தமிழ்க்கவிநான் உமைக்காண வந்தேன்" என்றான்.

வேல்வேந்தன் அன்னவனை உற்று நோக்க,
       வெப்பத்தால் வாடியவன் அவனை நோக்கிப்