|
தலைமலைத்
தேவன்
|
|
சந்தனச் சோலை மூதூர்
தலைமலை கண்ட தேவன்,
அந்தநாள் கவிஞன்; அன்னோன்
அந்தக் கவிஞன்; பாட்டுப்
பந்தயக் கவிஞன்; நீதி
பாடிய கவிஞன்; சொந்தச்
சிந்தனைக் கவிஞன்; பாடல்
திருடாத கவிஞன் ஆவான்!
தாய்மொழிப் பற்று மிக்க
தலைமலைத் தேவன் ஓர்நாள்,
நாய்துயி லறிந்தும். நெய்தல்
நகர்துயி லறிந்தும், தொட்டில்
சேய்துயி லறிந்தும், அவ்வூர்ச்
சித்திரப் பரத்தை வீட்டின்
வாய்தனில் கதவை நீக்கி,
வளமனை உள்ளே சென்றான்.
மென்புறாப் போன்ற வேசி
மெத்தையில் படுத்தி ருக்க,
அன்னவன், கட்டி லின்கீழ்
அசைவின்றிப் பதுங்கிக் கொண்டான்.
இன்னிசை வீணை ஓர்பால்
இருந்தது; விளக்கும் வீடும்,
மின்னின! வெண்பா ஒன்றை
விலைமகள் பாட லானாள்.
வெண்பாவை முடிப்ப தற்கு
விலைமகள் திணறும்போது,
|
|
|
|