|
"அரித்திடும்
வறுமை தீர்ப்பேன்
அஞ்சாதீர்" என்றாள் வஞ்சி!
மையணி மடந்தை சொன்ன
வார்த்தையைத் தேவன் கேட்டுத்
தையெனக் குளிர்ந்தான்; பின்னர்
தமிழ்பற்றிப பேச லானார்.
ஐயென விரைந்து தோன்றும்
அழகுவெண் ணிலாவைப் போன்றாள்
நெய்யமு தளித்தாள். உண்டான்,
நேரிழை அவனை நோக்கி...
"முப்பாலைத் தந்தான், பூத்து
மூத்தவ னான தேவன்.
அப்பாலோர் தேவன் வந்தான்,
அன்னவன் `மணநூல்` தந்தான்;
இப்போது நீரோர் தேவர்
என்பதால் எதிர்பார்க் கின்றேன்."
"நாராய ணாவென் பார்க்கும்
நமசிவா யாவென் பார்க்கும்
தீராத வினையைத் தீர்க்கும்
தேவனே எனச்சொல் வார்க்கும்.
ஊராரும், எங்கள் வீட்டில்
உள்ளாரும் அடிமை! செய்யுள்
ஆராயும் பாவா ணர்க்கே
அடிமைநான்" என்றாள்! ஈந்தாள்!
|