| 5. காரணப் பெயர்கள் |
| பிள்ளைப்
பாண்டியன் |
நீங்காத மானமும்
தூங்காத வீரமும்
ஓங்கிய பெருமையும் ஒழுக்கமும் வாய்மையும்
பழுத்த புலமையும் பழுதிலாத் திறமையும்
உடையோ னாகி ஊராண்ட மன்னவன்,
அதிவீர ராம பாண்டியன் ஆவான்.
புதுவீர ராமனாம் அதிவீர ராமன்,
அறிஞன்! நிரம்ப அழகிய தேசிகர்
மாணவன்! தென்காசி நகரத்து மன்னவன்.
பொய்யில் புலவரைப் போற்றிப் புரவலன்;
கோட்டைக் கொத்தளம், குடிபடை சூழ்ந்த
நாட்டுக்கும் வேந்தன்; பாட்டுக்கும் வேந்தன்!
ஒன்று கூட்டிய நட்பைப் பிரிக்கவும்
பிரிந்த நட்பினைக் பின்னர் சேர்க்கவும்
அறிந்தவன்; அரசியல் சாத்திரம் அளந்தவன்!
கூர்ம புராணம், இலிங்க புராணம்,
மகா புராணம், வாயு சங்கிதை,
கருவை அந்தாதி, காசி காண்டம்,
வெற்றிபெற உதவும் வெற்றி வேற்கை,
புலவர்க் கௌடத மாகிய நைடதம்
என்னும் நூற்களை இயற்றிய கோமகன்!
ஆற்றல் மிகுந்த அதிவீர ராமனின்
இயற்பெயர் 'அழகன் பெருமாள்' என்பதாம்! |
|
|
|