பால்வாய்ப்
பசுந்தமிழ்ப் பாண்டிய மன்னனை
வல்லப தேவன், பிள்ளைப் பாண்டியன்,
குலசே கரன்,குண சேகர வழுதி,
செந்தமிழ் வளர்த்த தென்னவன்-என்றும்,
ஆராய்ந்த புலவர் அழைத்து வந்தனர்.
மன்றம் ஏறி வாதிடும் புலவர்,
அறிவும் திறனும் அற்றா ராயின்,
அன்னவர் தலையில் அரசன் குட்டுவான்.
வாதிடும் போது வாள்வேந்தன் தோற்றால்,
தன்னை வென்ற சான்றோர் கரங்களால்
குட்டுப் படுவான் கொற்கைப் பாண்டியன்.
சர்க்கரை கசக்க, முக்கனி துவர்க்க,
அமுதினும் இனிய அருந்தமிழ்ப் பாடல்கள்
தொடுக்கும் புலவர் தோற்ற பொழுதிலே, குட்டுவதும்,பாண்டியன் குட்டுப் படுவதும்,
வேடிக்கைப் பிள்ளை விளையாட்டுப் போன்ற
செய்கை என்று தெரிந்து வியந்து,
மண்ணெல்லாம் உய்ய மழைபோல் விளங்கிய
அண்ணல்வேந்தனை, அதிவீர ராமனைக்
கொள்கைக் கவிஞர் கூட்டம்
பிள்ளைப் பாண்டியனென்று பெயரிட் டழைத்ததே! |
|
அசோகன்
|
|
ஓராம் மாதம் உடம்பு பூரித்தும்
ஈராம் மாதம் இடையது பெருத்தும்
மூன்றாம் மாதம் முகமெல்லாம் வெளுத்தும்
கனிந்த கொங்கையின் கண்கள் கறுத்தும்.
|
|
|
|