|
நாலாம் மாதம்
நஞ்சுண்ட கொடைபோல்
மேலும் மேலும் மேனி வெளுத்தும்
மயக்கம் பெருகியும் மசக்கை நழுவியும்,
ஐந்தாம் மாதம் அங்கம் பசந்தும்,
புளிக்கும் பொருள்களைப் புகழ்ந்து புசித்தும்
ஆறாம் மாதம் அடிவயிறு கனத்தும்
கூறும் மொழியெலாம் கோப மாகியும்,
ஏழாம் மாதம் ஏய்ப்பிளைப் புற்றும்
நாவுக் கினியதை ஆவலொடு தின்றும்
எட்டாம் மாதம் எழமுடி யாமலும்
கட்டுகள் விட்டும் கடுகடுப் புற்றும்,
ஒன்பதாம் மாதம் தின்பதை மறந்தும்
முற்றிய மாதம் பத்துவந் துற்றதும்
அங்கம் நொந்திடச் செங்கனி மங்கையர்
குழிக்கிழங் கென்னும் குழந்தையைக் பெறுவர்!
எழுமதி யாகிய முழுமதி முகத்தினள்;
பழுதறு சொல்லினாள்; பண்கொண்ட வாயினள்
தாங்குபுகழ் சுபத்தி ராங்கி என்பாள்
புவிபுகழ் அசோகனை ஈன்ற பொழுதிலே
துடித்திட வில்லையாம்! துன்புற வில்லையாம்!
இடுப்பு நோக்கோடும் இளைப்பும் சோகமும்,
ஏந்திமழை மாதுக் கேற்பட வில்லையாம்!
சோகம் என்றால், துயரமென் பதுபொருள்;
சோகந் தருவோன் சோகன்; அவ்வாறு
சோகந் தராதவன் அசோகன் ஆவான்!
வீரங் காட்டிய வேந்தன் அசோகன்,
கலிங்க நாட்டினைக் கலங்கிட வைத்தும்
|