மாறுபட்
டோரை வேரொடு வீழ்த்தியும்
மன்னர் பலரை மயானமண் ணாக்கியும்
வெற்றியை வேண்டிக் குற்றம் புரிந்தவன்!
ஆயினும் அன்னவன் பிறந்த பொழுதிலே
தாய்க்குச் சோகம் தரவே இல்லை;
ஆதலால் அவனை அசோகன் என்றே
ஆசையொடு வேந்தன் அழைத்திட,
ஓசை பெற்ற உலகமும் அழைத்ததே! |
|
அகலியை
|
|
ஊர்நிறைந் திருக்கும் உலகின் திசையெலாம்
பேர்நிறைந்த திருந்தவன் வள்ளல் பேகன்!
பேகன், தகுதியாற் பெரியவன்! தனித்தமிழ்த்
தாகந் தீராத் தலைவன் ஆவான்!
அன்னவன் மனைவி, குறுந்நெடுந் துணைவி;
நாணொடு பிறந்த நங்கை! அந்தக்
கனிமொழி மங்கையின் பெயரோ கண்ணகி!
கூடல்மா மதுரைக் கொற்றவன் ஒருவனால் கொலையுண் டிருந்த கோவலன் என்பான்
கண்ணீர் மனைவியின் பெயரும் கண்ணகி!
இத்தமிழ் நாட்டிலே, இரண்டு கண்ணகியர்
இருந்தாற் போலவே, அகலிகை இருவர்,
வடவர் நாட்டிலே வாழ்ந்ததாக,
அந்நாட்டுச் சுவடிகள் அறிவிக் கின்றன!
அவர்களுள் ஒருத்தியோ, ஆண்டு மாண்ட
மகத நாட்டு மன்னவன் மனைவியாம்!
|
|
|
|