பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை76

பலர்போற்றும் பகலில்நான் உறங்க மாட்டேன்
      பகலுறக்கம் உயிர்குறைக்கும் என்ப தாலே!
கலைநூற்கள் அன்றாடம் பயில்வேன்; வீட்டுக்
       கணக்குதனை எழுதிவைப்பேன்; மாலைப் போதில்
தலைவாரிச் பூச்சூடிக் கொண்டு, தெற்குத்
      தமிழ்த்தலைவர், என்கணவர் வருகை நோக்கி,
நிலைவாசல் முன்வந்தே எட்டிப் பார்ப்பேன்;
       நெருப்புவெயில் வட்டமெனை எட்டிப் பார்க்கும்!

கச்சிதமாய் உறங்கிக்கொண் டிருப்பேன் வீட்டில்;
       கண்கலந்த என்கணவர் அருகில் வந்தே
நச்சரிப்பார்; நயமாகப் பேசி, சற்றே
       நகரென்பார்; நான்மறுப்பேன்; ஊடல் தீர்ப்பார்!
"இச்சமயம் ஒளியிலையே அத்தான்" என்பேன்;
      "இருள்தானே பூனைக்கு வேண்டும்!" என்பார்;
உச்சரிப்பு நின்றுவிடும்; தொடுவார்; ஈர
      உடைபோல்நான் அவருடலில் ஒட்டிக் கொள்வேன்.

மணக்க மாட்டேன்

தேய்புரிப் பழங்க யிற்றைப்
      போன்றானைச் சிறப்பில் லானை;
வாய்மையும், சிறந்த வாக்கு
      வன்மையும் இல்லா தானை;
நோய்மத வெறிகொண் டானை;
       நுண்ணறி வில்லா தானைத்
தாய்மொழிப் பற்றில் லானைத்
       தையல்நான் மணக்க மாட்டேன்,

அரியநூல்; புவிமீ துள்ளோர்
       அனைவர்க்கும் பொதுநூல்; நீதி