பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை77

விருந்துநூல்; மேல்கீழ் என்னும்
       வேற்றுமை நோயைத் தீர்க்கும்
மருந்துநூல்; அறிவில் மூத்தோன்
       வடித்தநூ லான முப்பால்,
திருக்குறள் கல்லா தானைத்
       திருமணம் செய்து கொள்ளேன்!

உண்ணாதான்; அறஞ்செய் யாதான்;
       ஓங்கிய கீர்த்தி சேர்க்க
எண்ணாதான்; நேர்மை நோக்கம்
       இல்லாதான்; பிறந்த நாட்டைக்
கண்ணேபோற் சிறந்த தாகக்
      கருதாதான்; ஈக்கள் மொய்த்த
புண்ணேபோல் இழிந்தோன்; அந்தப்
       புல்லணை மணக்க மாட்டேன்!

பஞ்சம்

மாங்காய்ப்பால் உண்டு; வேறு
       மரங்களின் பாலு முண்டு;
தேங்காய்ப்பால் வீட்டி லுண்டு;
       செயற்கைப்பால் கிடைப்ப துண்டு!
ஆங்காங்கே பசும்பால் விற்கும்;
       ஆயினும் விலைகொ டுத்து
வாங்காப்பால் என்னும் தாய்ப்பால்
       மட்டுமே நாட்டில் பஞ்சம்!

மஞ்சளும் உண்டு; முல்லை
       மலர்களும் எங்கு முண்டு;
வஞ்சியர் முகத்தில் இன்றோ
       மஞ்சளின் பூச்சைக் காணோம்!