7.
குறுங்காவியம்
|
வன்னிய
வீரன்
தொண்டை நாடு
|
குறிஞ்சித்
திணையைக் குறித்திடும் மலைகளும்
குன்றினேன் என்று குன்றிய குன்றமும்
உதித்தசெங் கதிரின் ஒளியைத் தடுத்து
நிறுத்தியும் நிழலால் நிலத்தை மெழுகியும்
வானுற வோங்கி வளர்ந்த காடுகளும்
பயன்தரும் பொழிலும் பழமுதிர்ச் சோலையும் பனிப்புனல் ஏரியும் பளிங்கைக் கரைத்தே
ஓட விட்டாற் போன்றநீ ரோடையும்
சாகாக் கடலும் தாமரைத் தடாகமும்
தளராப் பயன்தரும் சதுர வயல்களும்
வாழையும் மங்கல மஞ்சளும் இஞ்சியும்
இயற்கை எழிலை ஏந்திக் காட்டிட;
மழைவயிறு கிழிக்கும் மாட மாளிகை,
மான்விழிச் சாளரம் வைத்த வளமனை,
ஆறுபோற் கிடந்த அகல்நெடுந் தெருக்கள்,
கூறுநல் லடியார் கோபுரக் கோயில்கள்,
ஓங்குபே ரழகினை ஓர்புறம் கூட்டிட; |
சான்றோர்
|
சீர்தளை கொண்ட செந்தமிழ்ச் செய்யுள்
தொடுத்துக் காட்டிய தொகைநூற் புலவர்க்குக்
கொடுத்துக் காட்டிய கூவத்து நாரணன்,
|
|
|
|