இடையறா
தளித்த சடைய நாதன்,
தேம்பாது வழிங்கிய பூம்பாவை முதலியார்,
நிறைந்த புகழாற் சிறந்தசீர் காழி
அருணா சலகவி ராயரை ஆதரித்தே
வரிசை யறிந்து வழங்கிய மணலி
முத்து கிருட்டின முதலிபோன் றோரும்,
சைவந் தழைத்திடத் தனிநூல் ஒன்றினைத்
தூக்கெனும் செய்யுளால் ஆக்கி அருளிய
சேக்கிழார் அடிகளும், செஞ்சொல் கொஞ்சும்
தஞ்சை வாணன் கோவைசெய் தருளிய
பொய்யா மொழியரும், பொன்வினை களத்தூர்
புகழேந்திப் புலவரும், பொங்கு தமிழ்ச்சுவை
தங்கிய பாடல்கள் தங்கிய பலநூல்
பாடி அருளிய படிக்காசுப் புலவரும்
செய்த நூற்களின் சிந்தனை உலவிட;
வாடாத சான்றோர் வகுத்தநல் லறமும்
பிழைபடாக் கற்பும் பின்படா வீரமும்
கொண்டுபுகழ் கொண்டது தொண்டை நன்னாடு |
ஆடிற்று
நாடு
|
சொல்லத்
சொல்லத் தொடர்ந்தே பரவும்
நல்ல புகழொடும் நடுங்காத் திறத்தொடும்
இத்தொண்டை நாட்டினை இளந்திரையன் ஆண்டனன்,
மாலை வெகுண்ட மன்னவன் மாண்டபின்
மரபுமுறை கெடாமல் மற்றவர் ஆண்டனர், |
|
|
|