முன்வளர் புருவம்
முட்க ளாயின;
சொற்களோ பருக்கைக் கற்க ளாயின.
அந்தித் தென்றல் சந்திக்க வந்தது;
வந்த தென்றலை வஞ்சி வெறுத்தனள். |
விருந்துக்கு
வந்தான்
|
பரத்தையின்
மடியிற் படுத்துக் புரண்டிட
வன்னிய வீரன் வந்தனன் ஆங்கே!
பொதுவுடல், பொதுமுகம் பொதுவிழிப் பரத்தை
நாடி வந்தோனை ஓடிவர வேற்றனள்.
காமப் பசியோடு வந்தோன்,கணிகையின்
பேரழகைக் கண்டு பெரு மூச்சு விட்டான்;
தோளழைகைக் கண்டு துடித்துப் பதைத்தான்.
நெருப்பினால் உருக்கிய நெய்யின் நிறத்தினள்,
சிரிப்பினால் உருக்கிச் சிற்றின்ப இதழ்களால்
கிளிமழலை செய்தனள்; கீழ்மகள் செய்த
சொல்வழி நின்றத செவியே, அன்னவள்
விழிவழி நின்றது வேந்தன் மணிமுகம்!
பறந்து வந்தவன் பரத்தையை நோக்கிக்
"காதங் கமழ்ந்திடும் கருங்குழல் மாதே!
கடல்படு முத்தையும் காடுபடு பொருளையும்
மலைபடு மணியையும் மதித்திடா துன்றன்
உடல்படு பொருள்தொட ஓடோடி வந்தேன்;"
அடம்பம்பூக் கிழிக்கும் அன்னமே! உன்றன்
கண்ணழகு நீலக் கடலுக்கு வருமோ?
பொருந்தி வளரும் புருவத்தின் வளைவு,
வல்வில் ஓரி எடுத்து வளைத்தே |
|
|
|