8.
அகத்துறை
|
பாவையைப்
பார்த்தீரோ
|
அழகிற் சிறந்திருப்பாள்
-குலமகள்
அன்னம் எனநடப்பாள்!
தழுவுங் கொடியிடையாள்-திருவளர்
தாமரை போன்றிருப்பாள்!
விழியில் நிலாவளர்ப்பவள்-சுரையின்
விதையது போல்நகைப்பாள்;
மழையின் குளிரமுதை-மதுமலர்
மங்கையைக் கண்டீரோ?
மஞ்சள் குளித்திருப்பாள்-விழிதனில்
மையிட்டுக் கொண்டிருப்பாள்;
கொஞ்சம் மலர்பறித்தே இருள் தருங்
கூந்தலில் சேர்த்திருப்பாள்;
நெஞ்சைக் கவர்ந்திழுக்கும்-திலகமும்
நேரிழை வைத்திருப்பாள்;
வஞ்சி நகரென சிறந்தபெண்
வஞ்சியைக் கண்டீரோ?
நேரிழை மார்பினிலே-மணிச்சரம்
நீண்டு கிடந்தசையும்
ஓரிரு குண்டலங்கள்-செவிதனில்
ஊஞ்சலைப் போலாடும்
காரிகை கற்றவளாம்-அவளிரு
காலிற் சிலம்பிற்க்கும்
பாரியின் தேரெனவே-சிறந்தபூம்
பாவையைப் பார்த்தீரோ? |
|
|
|