இருட்டுக்கு
சேலை தந்தாள்
|
முல்லைக்கு
முறுவல் தந்தாள்;
முகிலுக்கு கூந்தல் தந்தாள்;
வில்லுக்குப் புருவம் தந்தாள்
வேலுக்கு விழிகள் தந்தாள்;
சொல்லுக்கு செந்தேன் தந்தாள்
சுனைதீர்க்கும் குளிர்ச்சி தந்தாள்;
அல்லிக்கு செவ்வாய் தந்தாள்;
அழகுக்கே அழகு தந்தாள்:
நடைதந்தாள் அன்னத் திற்கு;
நகைதந்தாள் எனக்கு, நன்னூல்
இடைதந்தாள் கொடிக்கு; நல்யாழ்
இசைதந்தாள் எனக்கு, தக்க
விடைதந்தாள் பிறர்க்கு; மையல்
விழிதந்தாள் எனக்கு,
மேலும் மடல்தந்தாள் படிப்ப தற்கு;
மலர்தந்தாள் நுகர்வ தற்கு!
மிரட்டிக்கொண் டிருந்த காளை
மாட்டினை விரைந்து நான்போய்
விரட்டிக்கொண்ட டிருந்தேன், வந்தாள்,
விழிகளால் பிடித்தேன்; காதல்
திருட்டுக்குத் தேதி தந்தாள்;
சேல்விழி பாதி தந்தாள்,
இருட்டுக்குச் சேலை தந்தாள்;
இளமைக்கு வேலை தந்தாள்! |
|
|
|