கண்
சிவந்ததேன்?
|
தோழி
எண்ணவும் எழுதவும் இலைதனைக் கிள்ளவும்
வண்ண மலர்களை வளைபெறத் தொடுக்கவும்
இன்னிசை யாழினை எடுத்து மீட்டவும்
அறிந்த மங்கையே! அழகின் தங்கையே!
விடுபடா அம்பு விழிபெற்ற மாதே!
கொடிபடு கிழங்குக் கொண்டைஏன் அவிழ்ந்தது?
தலைவி
சஞ்சீவி பர்வதச் சாரலின் ஓரம்,
விரிந்த விரலென விளங்குசெங் காந்தள்
கொத்து மலரைநான் குனிந்து பறிக்கையில்,
`இளி`யெனும் ஓசை எழுப்பும் வண்டுகள்
குறும்பு செய்ததால் கொண்டை அவிழந்தது!
தோழி
"பன்னீ ருயிரும் மொழிமுத லாகும்
உயிர்மெய் அல்லன மொழிமுத லாகா;
மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை"
என்றெனக் குணர்த்திய இசைத்தமிழ் தலைவியே!
பட்டினம் பெற்ற கலம்போன்ற பாவையே,
பொட்டு கலைந்துபோனதேன் கூறுக!.
தலைவி
ஆண்டிப் புலவர் பிறந்தவூ ரான
ஊற்றங்கால் சென்றுநான் உடனே திரும்பி
வருகையில், சூரிய வட்டம் சுட்டுப்
பொசுக்கிற் றதனால் பொங்கிய வியர்வைநீர்ப்
பட்டு, குங்குமப் பொட்டு கலைந்தது! |
|
|
|