தோழி
வாய்மொழி வளர்ந்தால் தாய்மொழி வளரும்;
தாய்மொழி தேய்ந்தால்தன்மானம் தேயும்;
நோய்கொண் டாலும் கொளலாம்; மதமெனும்
பேய்கொளல் தீதெனப் பேசி விளக்கும்
சிந்தனைச் செல்வியே! செந்தமிழ் கிளியே!
இந்தப் பற்குறி எவ்வாறு வந்தது?
தலைவி
சித்திரக் கிளிக்கொரு முத்தம் கொடுத்தேன்;
பச்சைக் கிளியே, பவளவாய் இதழ்களைப்
கொழுத்துப் பழுத்த கோவைக் கனியென
எண்ணிக் கொண்டென் இதழ்களைப்
புண்ணாக்கி விட்டது பூங்கொடி வஞ்சியே |
கொய்யாக்கனி
|
(கும்மி)
|
வெள்ளிக் கிழமை
பிறந்தவளாம்-அவள்
வேலிப் பருத்தியைப் போன்றவளாம்!
பள்ளக் கடலவள் பார்வைகளாம்-புதுப்
பங்கயப் பூக்களே செங்கைகளாம்!
பெய்யும் மழைபோற் குழிர்ந்தவளாம்- அவள்
பிச்சை மலர்போற் சிறந்தவளாம்!
நெய்யின் நிறத்தினைப் போன்றவளாம்-அவள்
நெற்கதிர் நாணம் உடையவளாம்!
துய்ய தமிழ்கவி செய்பவளாம்-அவள்
தொட்டால் சுடாதவோர் செந்தணலாம்!
கொய்யும் தளிரது போன்றவளாம்- அவள்
கொய்யாக் கனியாய் இருப்பவளாம்! |
|
|
|